EnTamil.News
F Y T

நுவரெலியாவில் முன்னாள் மாநகரசபை முதல்வர் வீட்டில் திருட்டு

EnTamil - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-09-28)
நுவரெலியாவில் முன்னாள் மாநகரசபை முதல்வர் வீட்டில் திருட்டு

இனம் தெரியாத நபர்கள், நேற்று (28.09.2024) அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் புகுந்துள்ளனர்.

நுவரெலியா (Nuwara Eliya) - கஜபாபுர பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா முன்னாள் மாநகரசபை முதல்வரின் வீட்டில் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனம் தெரியாத நபர்கள், நேற்று (28.09.2024) அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் புகுந்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் இனம் தெரியாதோர் புகுந்துள்ளனர்.

மேலும், அலுமாரிகள் உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் மேல்மாடியில் வந்து பார்த்த போது ஜன்னல் திறக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்து இருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்துள்ளதுடன் அருகில் உள்ளவர்களின் உதவியை நாடியுள்ளனர். அதேவேளை, குறித்த நபர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி செல்லும் காட்சிகள் வீட்டுக்கு அருகில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் போது வீட்டின் மேல்மாடியில் ஜன்னல் ஒன்றினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள் தனி அறையொன்றில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்கப் பொருட்கள் மற்றும் சில பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டது தெரியவந்தது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ள நிலையில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் பரிசோதனைகளை மேற்கொண்டு நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - EnTamil

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.