வட மாகாணத்தில் ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும் அந்தணர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் தற்காலத்தில் அதிகரித்து செல்கின்றமை தொடர்பிலும் அது தொடர்பில் வேதனையான செய்திகள் வெளியாகுவது தொடர்பிலும்
ஆளுநர் நா . வேதநாயகன் கவலை தெரிவித்துள்ளார்
நேற்றுக்கு முன்தினம் இந்து சமய பேரவை மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மீண்டும் தெரிவித்துள்ளதாவது
தற்காலத்தில் ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும் அந்தணர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் நீடித்தும் அதிகரித்தும் செல்கின்றமை, கவலை அளிக்கிறது இவ்வாறான முரண்பாடுகளுக்கு அதிக அளவிலான பணம் வீணாக செலவாகிறது
சமூகத்தை வழிநடத்த வேண்டிய பெரிய பொறுப்பு ஆலயங்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட ஆலயங்கள் வழக்குகளுக்காக நீதிமன்றங்களை நாடும் நிலைமை ஏற்படுவது கவலையானது எனவும் ஆளுநர் இதன் போது தெரிவித்துள்ளார்