நேற்றைய தினம் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு விசாரணைகளில் சலுகைகள் அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மஹிந்தவின் மகன்யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கட்டிடம் ஒன்றிற்குள் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
யோஷித ராஜபக்ஷ ஷவை யார் இவ்வாறான புகைப்படத்தை எடுத்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில் இந்த புகைப்படம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது
இந்த புகைப்படம் தொடர்பில் விசாரணை செய்து ஊடகங்களுக்கு அறிவிப்பை வழங்குவதாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்
யோஷித ராஜபக்ஷ நாளைய தினம் வரையில் விளக்கம் வரிகளில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்
காணி ஒன்றுடன் தொடர்புடைய மோசடி வழக்கிலேயேயோஷித ராஜபக்ஷ சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்