EnTamil.News
F Y T

மாணவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-24)
மாணவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு

ஒரு சில அழகியல் சங்கங்கள் தற்போதைய காலகட்டங்களில் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் மீறி செயல்படுவது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது சிகை அலங்காரத்தை மேற்கொள்ளும் போது உரிய ஒழுங்கு முறைகளை பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாணத்தின் ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்


அத்தோடு மாணவர்கள் சிகை அலங்காரம் செய்வதற்கு அழகியல் நிலையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு பாடசாலைகளுக்கு ஏற்ற வகையில் தலைமுடியை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அழகியல் நிலையத்தினருக்கும் ஒன்று என அவர் சுட்டிக் காட்டி உள்ளார்


வடக்கு மாகாண ஆளுநருக்கும் அழகியல் சங்கத்தினருக்கு இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்


ஒரு சில அழகியல் சங்கங்கள் தற்போதைய காலகட்டங்களில் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் மீறி செயல்படுவது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது

ஒரு சிலர் சட்டத்திற்கு முரணான செயல்பாடுகளுக்கு துணை போவதாகவும் கடமை நேரத்தில் நாகரீகமற்ற முறையில் செயல்படுவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார் இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவர் விரைவில் உள்ளுராட்சி ஆணையாளர் உதவியாளையாளர் போலீசார் உடன் விசேட கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்


இதன் போது சிகை அலங்கார சங்கத்தினாலும் பல்வேறு முறைபாடுகளும் கோரிக்கைகளும் வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.