இலங்கை நாடாளுமன்றத்தில் முதல்முறையாக தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது
நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இந்த தைப்பொங்கல் நிகழ்வு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பாக இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது
கடல் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் தை பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது
பொங்கல் நிகழ்விலே விசட பூஜை வழிபாடுகள் விசேட நிகழ்வுகள் என்பன இடம் பெற்றுள்ளது
குறித்த தை பொங்கல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர் தமிழர்களின் உடைய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும்
இலங்கையில் இன ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் முகமாகவும்
குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்