2024 ஆம் ஆண்டு 321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 2024 ஜனவரி 01 திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் தொகுதி வரை 580 முறை பாடுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த காலகட்டத்தில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்று இருப்பதாகவும் அதில் அதிக அளவிலான முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது அத்தோடு சிறுவர்கள் தொடர்பான சித்திரவதை முறைப்பாடுகள் 1950 ஆகவும்
சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பான முறைப்பாடுகள் 229ம் கிடைத்துள்ளதாக அறிய முடிகிறது
இவ்வாறான நிலையில்அண்மைய காலகட்டங்களில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான வழக்குகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது