இலங்கைத் தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா அவர்கள் நேற்றைய தினம் 29 காலமானார்
அவருடைய இறுதி கிரிகைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெற இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிய வந்துள்ளது
இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று மதியம் ஒரு மணி அளவில் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிய வருகிறது தற்போது இலங்கை தமிழரசு கட்சியினுடைய மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவினுடைய பூத உடல் மக்களின் அஞ்சலிக்காக யாழ்ப்பாணம்மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
மாவை சேனாதிராஜாவின் பூத உடலுக்கு மதத் தலைவர்கள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்