யாழ்ப்பாணத்தில் தகாத தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயதுடைய சிறுமி உட்பட மூவர் கைதான சம்பவம் இடம்பெற்றுள்ளது
கோண்டாவில் பகுதியில் உள்ள மேல்மாடி வீடு ஒன்றில் வாடகைக்கு அரையொன்றை பெற்று கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் மிகவும் இரகசியமாகவும் நூதனமான முறையில் மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் குறித்த தகாத தொழிலை செய்து வந்துள்ளார்
ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்
இதன் போது குறித்த வீட்டின் மேல் அறையில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உட்பட இரு பெண்களையும் அவர்களை வைத்து குறித்த நடவடிக்கைக்கு ஈடுபடுத்திய 36வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது