யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் களைபீடாதிபதி பேராசிரியர் சி .ரகுராம் பதவி விலகியுள்ளார்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாரிய பிரச்சினைகளாக இருந்தமையாகவும் அதனை தட்டி கேட்டமை மற்றும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சில முடிவுகள் எடுத்தமைக்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை அவர் பதவி விலகியதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது
யாழ் பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆளுமையாக விளங்கிய பேராசிரியர் ரகுராமினுடைய பதவி விலகலானது அதிர்ச்சி அளிப்பதாக பல்கலைக்கழக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காகவும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படக்கூடிய பேராசிரியர் ரகுராம் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் மற்றும் சமூகத்தில் இடம் பெறுகின்ற விடயங்கள் தொடர்பில் கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்
இந்த ரீதியில் இவருக்கு ஏதேனும் அரசியல் அழுத்தங்கள் இருந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்
குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த பிரதான கட்சியை சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர். இதன் பின்னணியில் இருக்கலாமா என்கின்ற சந்தேகம் பல்கலைக்கழக சமூகத்தில் இருந்து எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்