இந்திய நாட்டின் நிதி உதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தின் கட்டடத்திற்கு மூன்றாவது முறையாகவும் பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது
பெயர் மாற்றத்திற்கு அமைய யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என தற்போது பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது
இந்தியாவின் மத்திய அரசின் நன்கொடை திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் 2023 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய தூதுவர் குறித்த கட்டடத்திற்கு திருவள்ளுவர் கலாச்சார மையம் என பெயர் சூட்டி பெயர் பலகையை திறந்து வைத்தனர்
எனவே குறித்த புதிய பெயர் பலகையில் யாழ்ப்பாணத்தின் அடையாளங்கள் குறிப்பிடப்படாமையினால் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் கல்வியலாளர்கள் என்பனர் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்
இந்நிலையிலே யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என தற்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது