இலங்கையில் இணையவழியில் கடவுச்சீட்டு பெறும் முறையில் முற்பதிவினை செய்து கொள்ள முடியும் என
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்
அதன்படி குறித்த ஒரு திகதியில் கடவுச்சீட்டை பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும் என ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது அவர் இதனை தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் யாரேனும் ஒருவர் திகதியை முன் பதிவு செய்தால் அவர்களுக்கு ஜூன் மாதம் 27 ஆம் தேதி கடவுச்சூட்டை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தார்
இணைய வழி முறமையை பொறுத்தவரையில் ஐந்து மாதங்களுக்கு பின்பே ஒரு திகதியில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்
அத்தோடு ஒதுக்கப்பட்ட திகதிக்கு முன்னர் அவசர தேவை உடையவர்களுக்கு அவர்களுடைய தேவையை கருத்தில் கொண்டு பயண கடவு சீட்டுகளை பெறுவதற்கு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்