யாழ்ப்பாணத்தில் இயேசுவின் சிலுவையில் இருந்து நீர் கசியும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் இயேசுவின் சிலுவையில் இருந்து நீர்க்கசிந்த சம்பவம் பிரதேசவாசிகளை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது
கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் மேல் இஜேசுவின் விரல் பகுதியில் இருந்து குறித்த திரவம் வெளியேற்றப்பட்டுள்ளது
சம்பவம் குறித்து அறிந்த மக்கள்இஜேசுவின் காலில் வடிந்த நீரை எடுத்துச் சென்றிருப்பதும் அறிய முடிகிறது
சகோதர மதத்தினரை சேர்ந்த ராணுவத்தினர் போலீசார் உட்பட மக்களும் இந்த காட்சியை பார்வையிட்டதோடு மட்டுமின்றி புகைப்படங்களையும் எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது
இந்த தகவலை தேவாலய பங்கு தந்தை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை அவர் உறுதிப்படுத்திய பின்பே மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என்று ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது