இலங்கையின் நாடாளுமன்றத்தின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் சமீபகாலமாக பல சர்ச்சைகள் எழுந்து வண்ணம் உள்ளன
அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தான் அரசியலில் வெகு காலம் நீடிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்
நேற்றைய தினம் அர்ச்சுனா எம்பி விசேட போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் பிணையில் விடுதலையானார்
பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது நான் ஒரு மருத்துவர் என்றும் கடந்த காலத்தில் தான் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்
இம்முறை மக்களுக்காகவே நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் எனக்கு அரசியல் துறை பிடிக்காது முற்பத்து எட்டு வருடங்களாக நான் ஒருபோதும் எந்த தேர்தலிலும் வாக்களித்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்
இப்போது நான் மக்களுக்காகவே அரசியலுக்குள் வந்திருக்கிறேன் இனிமேலும் நான் இங்கு இருக்க மாட்டேன் அரசியல் என்பது எனக்குப் பிடிக்காது ஆனால் அரசியலில் இருக்கும் வரைக்கும் நிமிர்ந்து நிற்பேன் என்று அர்ச்சுனா எம்பி தெரிவித்துள்ளார்