EnTamil.News
F Y T

அர்ச்சுனாவை தலைவலி எனக் குறிப்பிட்ட அமைச்சர்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-22)
ராமநாதன் அர்ச்சுனா
ராமநாதன் அர்ச்சுனா

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் குறித்த கலந்துரையாடலிலேயே தெரிவித்துள்ளார்

இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்


இலங்கை சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்ற ஒருவர் சட்டங்களை மதிக்காமல் சட்டத்திற்கு எதிரான செயலை செய்தால் அவருக்கு எதிராக நாட்டின் சட்டங்களை அமுல்படுத்த முடியும்


இருப்பினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்னும் காரணத்தை கொண்டு இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றம் அவரை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்


வீதி சட்டங்களுக்கு முரணாக இரவு வேளையில் போக்குவரத்து விதிகளை மீறி வண்ணமயமான விளக்குகளை எரிய விட்டு வாகனம் ஓட்டிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவை சோதனைக்கு உட்படுத்துவதற்காக நிறுத்திய போது போக்குவரத்து பணியில் இருந்து இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் அவர் முரண்பட்டுள்ளார் போலீசார் ஓட்டுநர் உரிமத்தை கேட்டபோது அதை வழங்க மறுத்துள்ள அர்ச்சுனா அவர்களை கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து திட்டியும் உள்ளார் இதை போலீசார் தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர் இந்த விடயம் தொடர்பில் விசாரணையை தொடங்கிய அனுராதபுரம் காவல்துறை சட்ட பிரிவுகள் படி 183 மற்றும் 344 மிரல் தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மூன்றாம் திகதி இந்த வழக்கு தொடர்பில் விசாரணைகள் முன்னேற்றம் செய்வதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்

மேலும் இவர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்படும் நாடாளுமன்றத்தில் அவரது நடத்தை குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே எதிர்க்கட்சிகள் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன எம்பி அர்ச்சுனாவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுகளும் உள்ளன இது தொடர்பாக இன்று நாடாளுமன்ற குழு கூடியது ..


அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் குறித்த கலந்துரையாடலிலேயே தெரிவித்துள்ளார்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.