யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை நிர்வாணம் ஆக்கி கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் நெடுங்காலமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் யாழ்ப்பாணம் இனிவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணம் ஆகி கட்டிவைத்து மிகவும் மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது
குறித்த தாக்குதலையும் மேற்கொண்டவர்கள் அவற்றை கைத்தொலைபேசியில் காணொளியாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளனர்சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேர் வரையில் தற்பொழுது அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்பொழுது துரிதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்