கொழும்பு மருதானை பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
கொழும்பு மருதானை போலீஸ் நிலையத்தில் பெண்களுக்கான சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பிரேத பரிசோதனை இடம்பெறும் வரை போலீஸ் நிலையத்தில் இருக்கும் பினவறையில் குறித்த பெண்ணின் சடலத்தை வைக்குமாறு மாலிக்காந்த நீதவான் லோஷினி அபயவர்த்தன உத்தரவு பிறப்பித்து உள்ளார்
மருதானை போலீசாரினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணுக்கு 32 வயது என்று அறிய தெரிவிக்கப்படுகின்றது
உயிர் இழந்த பெண் வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும்
போதை பொருள் குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியானைக்கு அமையவே மருதானை போலீசாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பெண் சிறைச்சாலையின் இரும்பு கதவில் தன்னுடைய பாவாடையை கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்
அவர் தூக்கில் தொங்குவதற்காக பயன்படுத்திய ஆடையை துண்டித்து உடனடியாக அவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நீதவான் நேரில் சென்று விசாரித்து உள்ளார்