EnTamil.News
F Y T

ஆயுதப்படைகளை அழைக்கும் ஜனாதிபதியின் முடிவு

EnTamil - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-09-29)
ஆயுதப்படைகளை அழைக்கும் ஜனாதிபதியின் முடிவு

பொது பாதுகாப்பு ஆணையின் பிரிவு 12 "இனை செயல்ப்படுத்துவது தேவையற்றது மற்றும் காவல்துறையின் இராணுவமயமாக்கலின் தொடர்ச்சியாகும்" எனவும், "நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும் ஆகும்"

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பொது அமைதியை பேணுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிட்டமை மனித உரிமை ஆர்வலர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்(Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் உள்ள இந்த நடைமுறை, தொடர்ந்து வந்த அரசாங்கங்களாலும் பின்பற்றப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் முடிவு குறித்து அதிருப்தி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ( Human Rights Commission of Sri Lanka) முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் (Ambika Satkunanathan) சமூக ஊடக தளமான X தளத்தில், ஜனாதிபதியின் இந்த முடிவு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அத்துடன் பொது பாதுகாப்பு ஆணையின் பிரிவு 12 "இனை செயல்ப்படுத்துவது தேவையற்றது மற்றும் காவல்துறையின் இராணுவமயமாக்கலின் தொடர்ச்சியாகும்" எனவும், "நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும் ஆகும்" என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். எனவே இந்த வர்த்தமானியை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் இது அவசியம்.

எவ்வாறாயினும், பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், பொதுப் பாதுகாப்பைப் பேணுவது அவசியம் என்று வாதிடும் சில சமூக ஊடக பயனர்களிடமிருந்து இந்த முடிவு ஆதரவைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ராணுவத்தை நிலைநிறுத்துவது நிறுத்தப்படலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

உசாத்துணை

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - EnTamil

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.