EnTamil.News
F Y T

முன்னாள் ஜனாதிபதிகள் மீது கொலை முயற்சிகள் இடம் பெறலாம் சந்திரிகா வெளிப்படுத்தியுள்ள உள்ள விடயம்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-05)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க

மேலும், அவருக்கு 30 பாதுகாவலர்களை மட்டும் வழங்குவது எந்த அளவுகோலின் படி முடிவு செய்யப்பட்டது என்பது அவருக்கு புதிராக உள்ளது. அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கடிதத்தில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தனது பாதுகாப்புப் படையின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 30 ஆக குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 மற்றும் 200 மற்றும் 109 பேர் கொண்ட பாதுகாப்பு குழுக்கள் வழங்கப்படுகின்றன.



மேலும், அவருக்கு 30 பாதுகாவலர்களை மட்டும் வழங்குவது எந்த அளவுகோலின் படி முடிவு செய்யப்பட்டது என்பது அவருக்கு புதிராக உள்ளது.

அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


விடுதலைப் புலிகள் அமைப்பு 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தம்மைக் கொன்று விடுவோம் என பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்கு தெரியப்படுத்தியதாகவும் முன்னாள் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் 63 இராணுவ அதிகாரிகளும், 180 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 243 பாதுகாப்பு அதிகாரிகளும், மைத்திரிபால சிறிசேன 109 பொலிஸ் அதிகாரிகளும், கோட்டாபய ராஜபக்ச 25 பொலிஸ் அதிகாரிகளும், 175 இராணுவ அதிகாரிகளும் 200 பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டுள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.