EnTamil.News
F Y T

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம்

நிரோ - 1 வாரத்திற்க்கு முன்பு (2024-12-12)
இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம்

கப்பல் மீள அனுப்பப்படவில்லை, மீளச் சென்றுள்ளது. குறித்த கப்பலில் 15 மெற்றிக் டன் பெற்றோலும் 15 மெற்றிக் டன் டீசலும் இருந்துள்ளது

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (12-12-2024) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளனர்.


யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெற்றிக் டன் எரிபொருளுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல் மீள அனுப்பப்பட்டமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

கப்பல் மீள அனுப்பப்படவில்லை, மீளச் சென்றுள்ளது. குறித்த கப்பலில் 15 மெற்றிக் டன் பெற்றோலும் 15 மெற்றிக் டன் டீசலும் இருந்துள்ளது.


உண்மையிலேயே இந்தக் கப்பல் கனியவள கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக நாட்டுக்குள் பிரவேசிக்கவில்லை.

இந்த கப்பல் திரும்பிச் சென்றதன் காரணமாக இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

நாட்டின் தேவைக்கு ஏற்ப எரிபொருள் தொகை காணப்படுகின்றது.

ஆகவே, நெருக்கடி இன்றி எரிபொருளை விநியோகிக்க முடியுமென கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.