தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கான 'சிவகங்கை" என்ற பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் குறித்த பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மேலும் இதற்கான ஆசன முன்பதிவு டிசம்பர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.