EnTamil.News
F Y T

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பெண் அதிபர் ஒருவர் கைது

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-08)
bribery
bribery

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்றாகம, மட்டுமாகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

றாகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் நேற்று (7) பிற்பகல் 150,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்றாகம, மட்டுமாகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முறைப்பாட்டாளரின் பிள்ளையை 2025ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் சேர்ப்பதற்கு இலஞ்சமாக இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட அதிபர் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பணத்தை நேற்று பிற்பகல் 4:00 மணியளவில் பாடசாலையின் காரியாலயத்தில் வைத்து பெறப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி அதிபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.