EnTamil.News
F Y T

பொது தேர்தலில் போட்டியிடும் நபர் நிதிமோசடி காரணமாக கைது யாழில் சம்பவம்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-12)
பொது தேர்தலில் போட்டியிடும் நபர் நிதிமோசடி காரணமாக  கைது  யாழில் சம்பவம்

சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வைத்து 49 வயதான நபர் இன்று செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி சுமார் ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.