EnTamil.News
F Y T

கிறிஸ்மஸ் காலத்தில் கேக்கின் விலைகளில் மாற்றம் இல்லை

நிரோ - 1 வாரத்திற்க்கு முன்பு (2024-12-10)
கிறிஸ்மஸ் காலத்தில் கேக்கின் விலைகளில் மாற்றம் இல்லை

இதன்படி, தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கான கேக்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ தரமான கேக்குகள் 1000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் , கேக் உற்பத்தியில் அதிகரிப்பு இல்லை, எனவே அது சாதாரண நிலையில் உள்ளது என்றார்

நாட்டில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்துக்கான கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார்.

கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்றார்.


அத்துடன் நல்லெண்ணெய், கோதுமை மா, முட்டை உள்ளிட்ட கேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டால், கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையையும் மக்கள் உணரும் விலையில் குறைக்க முடியும் என்றார்.

இந்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப்பம் கோரியதாகவும் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கான கேக்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ தரமான கேக்குகள் 1000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் , கேக் உற்பத்தியில் அதிகரிப்பு இல்லை, எனவே அது சாதாரண நிலையில் உள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.