EnTamil.News
F Y T

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு,..

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-08)
upul tharanga
upul tharanga

நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் அமெரிக்க தேசிய லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது

ஆட்ட நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பல்லேகல மைதானத்தில் முடிவடைந்த “லெஜண்ட் டிராபி 2024” கிரிக்கெட் போட்டியின் பணத்தில் செல்வாக்குச் செலுத்தியதாக உபுல் தரங்க, செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற Kandy Samp Army அணியின் உரிமையாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யோகி பட்டேல் தன்னை ஏமாற்றப் பரிந்துரைத்ததாக உபுல் தரங்க விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இன்று அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவிருந்த நிலையில், தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க, நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் அமெரிக்க தேசிய லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது

பிரிவுகள் தொடர்பான ( விளையாட்டு, )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.