அமெரிக்க துணை ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக புடினை சந்திக்க மாட்டேன் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில்,
அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபரை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியில் பதில் அளித்துள்ளார்.
"உக்ரைன் இல்லாமல் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது. நாட்டின் எதிர்காலம் குறித்து உக்ரைன் கூற வேண்டும்" என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பின் உக்ரைன் தொடர்பான கொள்கைகளை கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார்.
டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், உக்ரைனின் கீவ் நகரில் புடின் ஆட்சியைப் பிடித்திருப்பார் என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.