EnTamil.News
F Y T

வானிலை தொடர்பில் இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நிரோ - 3 வாரங்களிற்க்கு முன்பு (2024-10-12)
வானிலை தொடர்பில் இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களு, களனி, கிங் மற்றும் அத்தனகலு ஆகிய ஆறுகளின் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய நீரோடைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள காரணத்தினால் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.