EnTamil.News
F Y T

இலங்கையின் முக்கிய களஞ்சிய சாலையில் நச்சுத்தன்மையுடன் கூடிய மீன்கள் கண்டுபிடிப்பு

நிரோ - 3 வாரங்களிற்க்கு முன்பு (2024-10-12)
இலங்கையின் முக்கிய களஞ்சிய சாலையில் நச்சுத்தன்மையுடன் கூடிய டின்  மீன்கள் கண்டுபிடிப்பு
இலங்கையின் முக்கிய களஞ்சிய சாலையில் நச்சுத்தன்மையுடன் கூடிய டின் மீன்கள் கண்டுபிடிப்பு

கடந்த வருடமும் மனித பாவனைக்கு தகுதியற்ற செமன் மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலை வளாகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த டின் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த டின் மீன்கள் நேற்று (11.10.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆர்சனிக் எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோகம் அடங்கிய டின் மீன்களே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த செமன் டின் மீன் கையிருப்பின் பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செமன் டின் மீன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடமும் மனித பாவனைக்கு தகுதியற்ற செமன் மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் மீன் மனித பாவனைக்கு தகுதியற்றது என தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.