அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 419 பில்லியன் ரூபா திறைசேறி பத்திரம் மற்றும் பிணைமுறி கடன்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வரம்பற்ற கடன்களை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிதியைப் பயன்படுத்தி எவ்வாறான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் ரோஹினி கவிரத்ன குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.