EnTamil.News
F Y T

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்தது இஸ்ரேல்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-23)
Hezbollah's
Hezbollah's

அதேவேளை கடந்த 8ஆம் திகதி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹிஸ்புல்லாவின் அடுத்த கட்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஹஷேம் சபிதீன் (Hashem Abideen) பெயரை குறிப்பிடவில்லை. தற்போது ஹஷேம் சபிதீன் (Hashem Abideen) கொல்லப்பட்டதை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது

ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஷேம் சபிதீனும் (Hashem Abideen) கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாஸுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.


இதையடுத்து, லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் (Hashem Abideen) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதேவேளை கடந்த 8ஆம் திகதி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹிஸ்புல்லாவின் அடுத்த கட்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் ஹஷேம் சபிதீன் (Hashem Abideen) பெயரை குறிப்பிடவில்லை. தற்போது ஹஷேம் சபிதீன் (Hashem Abideen) கொல்லப்பட்டதை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.


எனினும் புதிய தலைவர் கொல்லப்பட்டதான தகவலை ஹிஸ்புல்லா இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.