EnTamil.News
F Y T

பிரான்சில் இலங்கைத் தமிழருக்கு மூன்று வருட சிறை

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-02)
பிரான்ஸ்
பிரான்ஸ்

குறித்த இலங்கையர் ஏற்கனவே வேறு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கையர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பிரான்ஸில் பயணிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 16ஆம் திகதி Corbeil-Essonnes ரயில் நிலையில் பயணி ஒருவர் மீது கத்தியால் குத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Évry-Courcouronnes குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.


என்ன நோக்கத்திற்காக இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டார் என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.


குறித்த இலங்கையர் ஏற்கனவே வேறு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கையர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


மனரீதியாக ஏற்பட்ட தாக்கமே இதற்கு காரணமாக என பலரும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.