EnTamil.News
F Y T

வெளிநாட்டு நாணயத்தால் மாற்றுவதற்காக சென்ற நபருக்கு யாழ் வங்கியில் நேர்ந்த கதி

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-05)
வெளிநாட்டு நாணயத்தால் மாற்றுவதற்காக சென்ற நபருக்கு யாழ் வங்கியில் நேர்ந்த கதி

யாழ். கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற சென்ற வாடிக்கையாளர் ஒருவரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக காணொளி வாயிலாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தமட்டில் வெளிநாட்டு அந்நிய செலாவணியின் வருவாயானது மிக முக்கிய பங்கை நாட்டுக்கு பெற்று கொடுக்கிறது.

எனினும் நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத பண பறிமாற்ற முறைகள் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இலங்கையில் சட்டவிரோத பணபறிமாற்ற முறையை மக்கள் நாடி செல்வது அரசாங்கத்தின் வருவாய் திறனை வலுவிழக்க செய்கிறது.

இவ்வாறான முறைமைகளுக்கு மக்கள் அதிக நாட்டம் காட்டுவதற்கு உரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும் காரணமாகிறது.

இந்நிலையில், இவ்வாறான அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவர் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள காணொளி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

யாழ். கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற சென்ற வாடிக்கையாளர் ஒருவரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக காணொளி வாயிலாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, குறித்த அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.