இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த உணவுப் பொருட்களின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் மதிப்பு வலுவடைந்ததன் பலன் மற்றும் மூலப்பொருட்களுக்கான விலை குறைப்பு ஆகியவற்றின் பலனை மக்களுக்கு வழங்குவதற்கு பேக்கரி, உணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தார்களான என்பதை ஆராய்வதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விலை குறைப்பு தொடர்பாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.