EnTamil.News
F Y T

வீட்டுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு நிலை சுமந்திரனுக்கு மேலும் நெருக்கடி

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-08)
இலங்கை தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சி

குறித்த கருத்தானது கட்சிக்குள் விமர்சனத்தையும் சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேட்பாளர்களுக்கான பிரசார நடவடிக்கைகள் மந்த கதியில் காணப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு கட்சியின் ஆசன ஒதுக்கீடு வழங்க மறுக்கப்பட்டது என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் தானாகவே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார்.

வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு (Charles Nirmalanathan) பல்வேறு காரணங்களால் ஆசன ஒதுக்கீடு வழங்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் (Mannar) கிளை அலுவலகத்தில் இன்று (8) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு அமைவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு வேறு பல காரணங்களால் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.


குறித்த கருத்தானது கட்சிக்குள் விமர்சனத்தையும் சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வேட்பாளர்களுக்கான பிரசார நடவடிக்கைகள் மந்த கதியில் காணப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு கட்சியின் ஆசன ஒதுக்கீடு வழங்க மறுக்கப்பட்டது என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அவர் தானாகவே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார்.


சுமந்திரனிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது வேறு பல காரணங்களை முன்வைத்து சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக விடுத்த கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.அது கட்சியின் நலனுக்கு உகந்ததாக காணப்படும்.


இதை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை சார்பாக கேட்டு நிற்கின்றோம்.

அரசியல்வாதிகள் தமது நலனையும் கருத்தில் கொண்டே அரசியல் செய்வார்கள்.அது கட்சியின் நலனுக்கானதா? என்பதை காலப்போக்கில் அறிந்து கொள்ள முடியும்“ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.