இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.
இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் அவர்களின் வலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.