EnTamil.News
F Y T

முல்லைத்தீவில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-20)
முல்லைத்தீவில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

குறித்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (20-11-2024) மாலை 5.30 மணியளவில் மாங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம் 5ம் மைல் கல் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.



குறித்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.



இதேவேளை, 31 வயதான மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.