அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை குறைக்குமாறு அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார(Anura Kumara Dissanayake) பணிப்புரை விடுத்துள்ளார்.
அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் உன்னிப்பாக செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடை முறைப்படுத்துமாறும் நுகர்வோர் அதிகார சபைக்கு அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி அரிசியின் விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.225 ஆகவும், சில்லறை விலை ரூ.230 ஆகவும் உள்ளது.
ஒரு கிலோ வெள்ளை வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகவும் சில்லறை விலை 220 ரூபாவாகவும் உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாடு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாகும்.
ஒரு கிலோ சம்பா அரிசியின் மொத்த விலை ரூ.235 ஆகவும், சில்லறை விலை ரூ.240 ஆகவும் உள்ளது. ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் மொத்த விலை 255 ரூபாயாகவும் சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.