EnTamil.News
F Y T

நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக அழைத்து வரப்பட்டவர் மரணம் யாழில் சம்பவம்

நிரோ - 1 வாரத்திற்க்கு முன்பு (2024-12-12)
நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக அழைத்து வரப்பட்டவர் மரணம் யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று (12) காலை வழக்கொன்றுக்காக அழைத்து வரப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணம் (Jaffna) சிறைச்சாலையில் இருந்து யாழ்.நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்து வரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று (12) காலை வழக்கொன்றுக்காக அழைத்து வரப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார்.


குறித்த கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புபட்டவர் என பொலிஸார் மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.