EnTamil.News
F Y T

தமிழரசு கட்சியை முடக்க சூழ்ச்சி மாவை தெரிவித்திருக்கும் விடயம்

நிரோ - 3 நாட்கள் முன்பு (2025-01-01)
தமிழரசு கட்சியை முடக்க சூழ்ச்சி மாவை தெரிவித்திருக்கும் விடயம்

இவ்வாறு தமிழ் மக்களின் பாரம்பரியமான கட்சியாக உள்ள தமிழரசு கட்சியை முடக்க முயல்வது அசிங்கமானது இவர்கள் நன்றி மறந்தவர்கள் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர்தான் இலங்கை தமிழரசு கட்சியை இப்பொழுது முடக்குவதற்கு சதி செய்து வருகிறார்கள்


இவ்வாறானவர்களே எனது தலைவர் பதவியை பிடுங்குவதில் குறியாக இருக்கிறார்கள் என இலங்கை தமிழரசு கட்சியினுடைய முன்னாள் தலைவரும் கட்சியின் தற்போதைய அரசியல் குழு தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்


இலங்கை தமிழரசு கட்சியானது இலங்கையின் பாரம்பரியமான தமிழ் மக்களின் கட்சியாகத் திகழ்ந்துவரும் நிலையில் தமிழரசு கட்சியின் தற்போதைய நிலை தொடர்பில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்


தமிழரசு கட்சிக்குள் குறுக்கு வழியில் நுழைந்தவர்கள் தான் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்

இவர்களின் சுயநல நடவடிக்கையில் தான் இப்பொழுது கட்சி பலவீனமாகியுள்ளது யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை தமிழரசு கட்சியை முடக்க வேண்டும் என்று தென் இலங்கை விரும்பியது அதற்கு இடமளிக்காமல் நானும் முன்னாள் தலைவர் சம்மந்தனும் தமிழரசு கட்சியை பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் பாதுகாத்து வந்தோம். இப்பொழுது எமது கட்சியை முடக்க முயற்சி செய்யும் சூழ்ச்சிக்காரர்களுக்கும் இது அனைத்தும் தெரியும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான் தற்பொழுது தமிழரசு கட்சியை முடக்குவதற்கு சூழ்ச்சி செய்து வருகிறார்கள் இவ்வாறு தமிழ் மக்களின் பாரம்பரியமான கட்சியாக உள்ள தமிழரசு கட்சியை முடக்க முயல்வது அசிங்கமானது இவர்கள் நன்றி மறந்தவர்கள் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.