புத்தாண்டு தினமான இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் தூய்மையான இலங்கை " கிளீன் ஸ்ரீலங்கா " தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
வருடத்தின் முதல் நாளான இன்று அனைத்து அரசு நிறுவனங்கள் அரசுத் திணைக்களங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் உடைய உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெற்றுள்ளது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசை நிறுவனங்களிலும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் அரச துறை மற்றும் தனியார் துறையில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை ஜனாதிபதிஅனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அலுவலகத்தில் முதலில் ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது