இலங்கையில் 2025 ஆம் ஆண்டு கொண்டாடப்படவிருக்கும் 77 ஆவது சுதந்திர தினத்தை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் மிகவும் குறைந்த செலவில் கொண்டாடுவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக தெரிய வருகிறது
இந்த சுதந்திர தின கொண்டாட்டங்களை பார்ப்பதற்கு மக்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அபயரத்ன இது தொடர்பில் நிகழ்வு ஒன்றில் பேசும் போது இதனை தெரிவித்துள்ளார்
இலங்கை நாட்டினுடைய 77வது சுதந்திர தினமானது நாட்டின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் பெருமையுடனும் பிரம்மாண்டத்துடனும் கொண்டாடப்பட வேண்டும் இருப்பினும் நாட்டில் இப்பொழுது இருக்கும் பொருளாதார நிலையில் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை குறைந்த செலவில் கொண்டாடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வுக்காக 107மில்லியன் ரூபாய் செலவாகி இருப்பதாகவும் இந்த ஆண்டு முடிந்த அளவு இந்த செலவுகளை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்