உத்தியோகப் பூர்வ விஜயமாக நான்கு நாட்கள் சீனாவிற்கு பயணம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீனாவின் சி ஜின் பிங்க் விற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சாந்தி போன்று இடம் பெற்றுள்ளது
குறித்த சந்திப்பானது என்று பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது
சீன மக்கள் மண்டபத்திற்கு வருகை தந்த இலங்கையின்அநுர குமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்க் அமோக வரவேற்பை அளித்துள்ளார் கௌரவமான முறையில் இலங்கை ஜனாதிபதிக்கான வரவேற்பு நிகழ்வு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து இலங்கை சீனா இடையிலான அரச தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது
எதிர்வரும் காலத்தில் இலங்கையும் சீனாவும் அபிவிருத்தி ரீதியில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்
நீண்டகால உறவுகளைக் கொண்ட நட்பு நாடுகளாக சீனாவும் இலங்கையும் திகழ்வதாகவும் இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்க சீனா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் எதிர்காலத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா தோள் கொடுக்கும் எனவும் சீனு ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்
இரு நாட்டு தலைவர்களின் உடைய சந்திப்புக்கு பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கைத்தொழில்துறை சமூகம் போன்ற பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாதிடப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது