யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் மர்மமான வீடு ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது
யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த மர்ம வீடு கரை ஒதுங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது
நாட்டில் தற்பொழுது நிலவி வருகின்றார் சீரற்ற வானிலை காரணமாக கடலில் ஏற்பட்டிருக்கின்ற சீற்றங்கள் நிலநடுக்கம் போன்ற அனர்த்தங்களின் மூலமாக தென்கிழக்கு ஆசியாவைச் சார்ந்த நாடுகளில் இருந்து குறித்த மர்ம வீடு யாழில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது
குறித்த மர்ம வீட்டில் பௌத்த மதம் சார்ந்த சின்னங்கள் அது தொடர்பான செய்திகளைத் தாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது
மியான்மார் தாய்வான் தாய்லாந்து மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இது வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது
இந்த மர்ம வீட்டை பார்ப்பதற்காக தற்பொழுது மக்கள் அங்கே குவிந்து வருகின்றனர்