EnTamil.News
F Y T

விமான சேவைகள் பல இரத்து: பயணிகள் இன்மையே காரணம்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-05)
Srilanka India Airlines
Srilanka India Airlines

10 இடங்களுக்கு விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதியளவிலான பயணிகள் இன்மையால் இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 இடங்களுக்கு விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பயணிகளின் விமானப் பயணச்சீட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை விமானநிலையத்தில் நேற்ற வெள்ளிக்கிழமை போதிய பயணிகள் இன்மையாலும் நிர்வாகக் காரணங்களாலும் ஐந்து வருகை விமானங்களும், புறப்பாடுச் செல்ல வேண்டிய ஐந்து விமானங்களும் மொத்தமாக 10 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.