EnTamil.News
F Y T

யாழில் போட்டியிடும் சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-05)
Sumandran and Sreedharan
Sumandran and Sreedharan

”கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக வேறு ஒரு வேட்பாளரை ஸ்ரீதரன் ஆதரித்தமையால் அவர் தேர்தலில் போட்டியிட கூடாது அல்லது அவரே ஒதுங்க வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் நானும் சிவஞானம் ஸ்ரீதரனும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். அதேபோன்று அதிகமான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இளைஞர்களும் வாய்ப்பு அளிக்கப்படும் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட தமிழரசுக் கட்சி இன்று வவுனியாவில் கூடியது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்தார்.

”கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக வேறு ஒரு வேட்பாளரை ஸ்ரீதரன் ஆதரித்தமையால் அவர் தேர்தலில் போட்டியிட கூடாது அல்லது அவரே ஒதுங்க வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன்.

என்றாலும், கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் எம் இருவரையும் போட்டியிடுமாறு கோரினர். அதன் பிரகாரம் நானும் ஸ்ரீதரனும் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவோம்.”எனவும் சுமந்திரன் கூறினார்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.