கனடாவில் தொலைபேசி கட்டணங்களை குறைக்குமாறு பிரதான தொலைபேசி நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு ரோமிங் அழைப்பு கட்டணங்களை இவ்வாறு குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னணி தொலைபேசி நிறுவனங்களுக்கு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்லும் கனடியர்கள் ரோமிங் கட்டணம் அதிகமாக காணப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தை கருத்தில் கொண்ட கனடிய தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மேற்குறிப்பிட்ட பரிந்துரையை செய்துள்ளது.
இதன் அடிப்படையில் ரோமிங் கட்டணங்களை குறைப்பது குறித்த பரிந்துரைக்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பிரதான தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதிக்குள் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் பதிலளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.