EnTamil.News
F Y T

வடக்கில் போதையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டம் தொடர்பில் வெளிவந்திருக்கும் அதிர்ச்சி தகவல்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-08)
drug-affected
drug-affected

840 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 350இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போதைப்பொருள் பாவனைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி (Kilinochchi) - முட்கொம்பன் பிரதேசத்தில் சுமார் 350இற்கு மேற்பட்ட குடும்பங்கள் போதைபொருள் பாவனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கிராம மட்ட அமைப்புக்களின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பூநகரி - முட்கொம்பன் பிரதேசத்தில் 840 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 350இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போதைப்பொருள் பாவனைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது, குறித்த பிரதேசத்தில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளன.


அந்தவகையில், பூநகரி கல்வி பண்பாட்டு மலர்ச்சி கூட்டத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டம் மூலமும் குறித்த விடயம் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, குறித்த பிரதேசத்தில் உள்ள 350இற்கு மேற்பட்ட குடும்பங்கள் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டிருப்பது.

அந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் நலிவுற்ற குடும்பங்களாக காணப்படுவதுடன் குடும்ப வன்முறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.