EnTamil.News
F Y T

தாஜ்மஹாலை பார்வையிட்டு தன் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாலைதீவு அதிபர்

நிரோ - 4 வாரங்களிற்க்கு முன்பு (2024-10-08)
Maldives president was photographed with his wife after visiting the Taj Mahal
Maldives president was photographed with his wife after visiting the Taj Mahal

"தாஜ்மகாலின் மயக்கும் அழகை வர்ணிப்பது கடினம். இதற்கு வார்த்தைகள் நியாயம் சேர்க்காது. இதன் கட்டிட நுணுக்கம், விரிவான வேலைப்பாடுகளும் காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்" இன்று கூறியுள்ளார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவி சஜிதா முகமதுவுடன் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளார்.


மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அபோது, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது இரு தலைவர்களும், நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே கார்டு அறிமுகம் மற்றும் ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை திறப்பு உட்பட பல ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.


19 ஆண்டுகளுக்குப் பிறகு வினேஷ் போகத் மூலம் வெற்றியை கைப்பற்றிய காங்கிரஸ்இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திற்கு மாலத்தீவு அதிபர் வருகை புரிந்தார். அப்போது அவரை ஆக்ரா விமான நிலையத்தில் அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார்.

பின்னர், தனது மனைவியுடன் முகமது முய்சு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றி பார்த்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இவரது வருகையின் காரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரை தாஜ் மஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


பின்னர், அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "தாஜ்மகாலின் மயக்கும் அழகை வர்ணிப்பது கடினம். இதற்கு வார்த்தைகள் நியாயம் சேர்க்காது. இதன் கட்டிட நுணுக்கம், விரிவான வேலைப்பாடுகளும் காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்" இன்று கூறியுள்ளார்.



பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.