EnTamil.News
F Y T

சீமான் மீது பல குற்றச்சாட்டுக்களை கூறி நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார்.

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-08)
seeman
seeman

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாம் தமிழர் கட்சியில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள் என்று சீமான் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

சீமான் மீது பல குற்றச்சாட்டுக்களை கூறி நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார்.


சில நாட்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் விலகினர்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் கட்சியில் இருந்து விலகினார். இவர்கள் கட்சியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் சீமான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சியில் இருக்கும் வரையில் இருப்பார்கள். அதிருப்தி வந்தால் திருப்தி இருக்கிற இடத்தில் போய் சேர்ந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாம் தமிழர் கட்சியில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன்.


நீங்கள் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள் என்று சீமான் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.