EnTamil.News
F Y T

அமெரிக்காவை மிரட்டும் பயங்கர புயலால் பதற்றம்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-09)
America
America

அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும். அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது.

அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும். அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டாம்பா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26 ஆம் திகதியும் ஹெலீன் புயல் தாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.