EnTamil.News
F Y T

தேசிய பட்டியலுக்காக காத்திருக்கும் ராஜபக்ச குடும்பம்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-11)
Rajapaksa family
Rajapaksa family

இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையான நாமல் ராஜபக்ச மற்றும் அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச இருவரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரையில் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் இம்முறை தேர்தலில் முன்னிலையாகாமலிருக்க தீர்மானித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது தேசியப் பட்டியிலில் நாடாளுமன்றத்தில் முன்னிலையாக தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக்கவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், கட்சி என்ற வகையில் தீர்மானமிக்கது என்பதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை ஒரு மாவட்டத்திற்கு மட்டுப்படுத்தக் கூடாது என கட்சியின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.